22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் 'கல்கி 2898 ஏடி' படம் இந்த வாரம் ஜூன் 27ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
இப்படத்திற்காக மும்பையில் மட்டுமே ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பிரபாஸ், தீபிகா, அமிதாப், கமல் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். அதற்கடுத்து ஐதராபாத், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இப்படத்திற்காக புரமோஷன் நிகழ்ச்சிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எங்குமே நடைபெறவில்லை.
இதனிடையே, பிரபாஸ் ஓய்வெடுப்பதற்காக ஐரோப்பாவிற்கு சென்றுவிட்டதாகவும் தகவல். இரண்டு வாரங்கள் வரை அங்கேயேதான் தங்கியிருக்கப் போகிறாராம்.
கமல்ஹாசன் இந்தப் படத்தில் நடித்தும் கூட சென்னையில் எந்த நிகழ்வும் இல்லாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. பான் இந்தியா படம் என்று சொல்லிவிட்டு மும்பையோடு நிறுத்திக் கொண்டுள்ளது தெலுங்கு திரையுலகத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சொந்த மாநிலத்திலேயே தயாரிப்பாளர், இயக்குனர், நாயகன் எந்த விழாவையும் நடத்தாமல் போய்விட்டார்கள்.