அடுத்த மூன்று முக்கிய வெளியீடுகளில் இசை ஜிவி பிரகாஷ்குமார் | ‛வார் 2' படத்தால் ‛கூலி' படத்திற்கு அடித்த ஜாக்பாட் | சூர்யா 45 படத்தில் படமாக்கப்பட்ட பிரமாண்ட பாடல் காட்சி | சச்சின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்தின் தலைப்பு இதுவா? | 9 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரி தரும் வின்சென்ட் செல்வா | 'எம்.குமரன்' ரீ-ரிலீஸ் : நதியா மகிழ்ச்சி | குட் பேட் அக்லி ஓடிடியில் வெளியாகும் தேதி, ரசிகர்கள் அதிர்ச்சி | பிரகாஷ்ராஜ், ராணா, விஜய் தேவரகொன்டா மீது வழக்கு பதிவு | ஐபிஎல் சீசன் : இரண்டு மாதங்களுக்கு தியேட்டர்களுக்கு சிக்கல் |
நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாள் நேற்று (ஜூன் 22) கொண்டாடப்பட்டது. இதனையடுத்து இயக்குனர்கள் அட்லி, நெல்சன் திலீப்குமார், லோகேஷ்கனகராஜ், வெங்கட்பிரபு, ஏ.எல்.விஜய் உள்ளிட்டோரும், கமல்ஹாசன், சாந்தனு, கவின் உள்ளிட்ட நடிகர்களும் வரிசையாக வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
நடிகைகளில், கீர்த்தி சுரேஷ் சற்று தாமதமாக நேற்று இரவு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இருவரும் ஒன்று போல் நீல நிற உடை அணிந்து நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து, விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறிவிட்டு இறுதியில் ‛அன்புடன் சுரேஷ்ஷ்ஷ்' எனவும் பதிவிட்டுள்ளார்.
விஜய் உடன் பல படங்களில் ஜோடியாக நடித்த நடிகை திரிஷா நேற்று முழுவதும் வாழ்த்து தெரிவிக்காத நிலையில், இன்று தனது ‛எக்ஸ்' பக்கத்தில் விஜய் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறி இருக்கிறார். அதில் விஜய் கருப்பு நிற உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். இருவரும் லிப்டில் பயணிக்கும் போது ‛மிரர் செல்பி' எடுத்துள்ளனர். அந்த போட்டோ இப்போது இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.