சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி பகுதியில் நடைபெற்ற நெல் திருவிழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த நெல் திருவிழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நெல் திருவிழாவில் சிவகார்த்திகேயனுக்கு ‛உழவர்களின் தோழன்' விருது வழங்கப்பட்டது. விழாவில் அவர் பேசியதாவது: மாபெரும் மனிதர்கள் நம்மாழ்வார் அய்யா ஆரம்பித்து வைத்ததை நெல் ஜெயராமன் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி சத்தம் இல்லாமல் ஒரு பெரிய சாதனையை செய்திருக்கிறார்கள். 174 பாரம்பரிய நெல் விதைகளை மீட்டு எடுத்து, இன்னைக்கு அது எல்லாரும் திரும்ப வந்து பயிர் செய்கிற மாதிரியான ஒரு சூழ்நிலையை அவங்க ரெண்டு பேரும் ஏற்படுத்தி இருக்காங்க. அவங்களுக்கு என்ன திருப்பி செஞ்சாலும் அது பத்தாதுன்னு நினைக்கிறேன். அவங்க ரெண்டு பேரும் விதைத்திருக்கிற இந்த எண்ணம், இந்த திருவிழா எல்லாமே அடுத்து வர பல தலைமுறைகளுக்கானது.
மக்களோடு மக்களாக இருந்த என்னை இப்படி மேடை ஏற்றி அழகு பார்க்கிறீர்கள். எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இந்த விருதை கொடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. சில விருது மகிழ்ச்சியை கொடுக்கும், சில விருது சந்தோஷம் கொடுக்கும், சில விருது உங்களுக்கு புகழை கொடுக்கும். அப்படியான விருதாக இதை நான் பார்க்கிறேன். இந்த விருதுக்கு எவ்வளவு தகுதியானவன்னு எல்லாம் எனக்கு தெரியவில்லை. ஏன்னா ஒரு விவசாயி தன்னை மட்டும் பார்க்காமல் எந்த கஷ்டம் இருந்தாலும் வெளியே சொல்லிக் கொள்ளாமல் உழைக்கிறார். விவசாயி என்ற அந்த வார்த்தையே ரொம்ப பவர்புல்லான ஒரு வார்த்தை.
‛உழவர்களின் தோழன்' என்ற இந்த விருதை நான் இன்னும் பெரிய பொறுப்பா பாக்குறேன். இதற்காக என்னால் இயன்றதை கடைசி வரைக்கும் ஏதாவது ஒரு வகையில் செய்வேன் என்பதை மட்டும் இந்த மேடையில் என்னால உறுதியாக சொல்ல முடியும். கடந்த முறை இந்த திருவிழாவில் பங்பேற்ற இயக்குனரும் நடிகருமான சசிகுமார், இந்த விழாவை தமிழகத்தின் பல ஊர்களில் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதையே தான் நானும் கேட்டுக்கொள்கிறேன். இந்த நெல் திருவிழாவை தமிழகத்தில் பல பகுதிகளில் நடத்த வேண்டும். அங்கும் நான் வந்து கலந்துகொள்ள ஆசைப்படுகிறேன். இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.