பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சீரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா | பவதாரிணி பிறந்தநாள்: வெங்கட்பிரபு உருக்கம் | பிளாஷ்பேக்: இளையராஜா இசை, தயாரிப்பில் சறுக்கிய திரைப்படம் | 10 ஆண்டுகளுக்கு முன்பே உருவான கதை 'டிராகன்' | பிளாஷ்பேக்: பெண் உளவாளியாக நடித்த முதல் நடிகை |
பிரபாஸ் உடன் சலார் படத்தில் நடித்த ஸ்ருதிஹாசன் அடுத்து தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தில் அவரது மகளாக நடிக்கப் போகிறார். சோசியல் மீடியாவில் அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது வழக்கமாக வைத்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்தபோது, தென்னிந்திய பாஷையில் ஏதாவது சொல்லுங்களேன் என்று ஒரு ரசிகர் கேள்வி கேட்டதை அடுத்து, இப்படி தென்னிந்தியர், வட இந்தியர் என்று கேட்பதே ஒருவிதமான இனவாதம்தான். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதோடு வட இந்தியாவில் உள்ளவர்கள் தென்னிந்தியர்களை பார்த்து இட்லி, தோசை, சாம்பார் என கிண்டலடிப்பது சரியல்ல. காமெடிக்காக கூட அப்படி சொல்லாதீர்கள். அப்படி சொன்னால் மூடிட்டு போடா என்று நான் தென்னிந்திய பாணியில் சொல்லி விடுவேன் என்று அந்த ரசிகருக்கு ஒரு பதில் கொடுத்து இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
சமீபத்தில் நடைபெற்ற அம்பானி மகன் திருமண விழாவில் நடிகர் ஷாருக்கான், தெலுங்கு நடிகர் ராம்சரணை அழைத்தபோது இட்லி, வடை, சாம்பார் என கூறி அழைத்தார். இப்படி ராம்சரணை ஷாருக்கான் கிண்டலாக குறிப்பிட்டது அப்போது வைரலாகி வந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்ருதிஹாசன் இப்படி ஒரு கருத்தினை வெளியிட்டு இருக்கிறார் என்று தெரிகிறது.