தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மோகன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'தி கோட்'.
இன்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோவிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
படத்தில் இரண்டு வேடங்களில் விஜய் நடிக்கிறார் என்பது படத்தின் முதல் பார்வை வெளியிட்ட போதே தெரிய வந்தது. இன்று வெளியான வீடியோவில் அவர்களிருவரும் இணைந்து ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளனர். அவர்கள் அப்பா, மகனா, அல்லது அண்ணன், தம்பியா என்பதும் தெரியவில்லை.
வீடியோவின் மூலம் கதை என்னவென்பதை புரிந்து கொள்ள வாய்ப்பில்லை. இருந்தாலும் டீசர் முடிவில் சில வினாடிகளில் நிறைய துண்டுக் காட்சிகள் வேகமாகக் கடந்து போகிறது. அதில் ஒரு காட்சியை நிறுத்திப் பார்த்தால் அதில் ஒரு டிவியில், “Peak Of 11 Billion In 2050” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
ஏற்கெனவே இந்தப் படம் ஒரு 'டைம் டிராவல்' கதை என்று செய்திகள் வெளிவந்தது. எந்தெந்த காலகட்டங்களில் கதை பயணிக்கப் போகிறது என்பதும் சஸ்பென்ஸ் ஆக உள்ளது.