'ஒரு பெண் போல சண்டை செய்' - சமந்தாவின் பதிவு யாருக்காக? | தமிழகத்தில் ஒரு கோடி பேர் பார்த்த 'அமரன்' | புஷ்பா 2 பட குழுவுக்கு நன்றி தெரிவித்த சாம் சி.எஸ் | சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடிக்கும் ரிஷப் ஷெட்டி | முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா அல்லு அர்ஜுன்? - டாக்டரின் கருத்தால் பரபரப்பு | புஷ்பா ஸ்ரீ வள்ளி என எழுதப்பட்ட புடவையுடன் வலம் வரும் ராஷ்மிகா | நாகசைதன்யாவின் மனைவி சோபிதா துலிபாலாவின் சகோதரி பெயரும் சமந்தாவாமே | சிரஞ்சீவி படத்தை தயாரிக்கும் நானி | 'லவ் டுடே' பாணியில் உருவாகும் 'ரிங் ரிங்' | ''மனைவியின் பேச்சை கேளுங்க'': கணவன்மார்களுக்கு அட்வைஸ் செய்த அபிஷேக் பச்சன் |
சமூக வலைத்தளங்களில் தனது காதலி நடிகை பவித்ரா கவுடாவிற்கு தகாத மெசேஜ்கள் அனுப்பியும், துன்புறுத்தல் செய்தவருமான ரேணுகா சுவாமி என்பவரைக் கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார். அவரது காதலி பவித்ரா, மற்றும் சிலரும் இந்த வழக்கில் கைதாகி உள்ளார்கள்.
இந்நிலையில் நடிகர் தர்ஷனின் மேனேஜர் ஸ்ரீதர் என்பவர் தர்ஷனின் பெங்களூரூ பண்ணையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனிமையில் இருப்பதால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவர் தற்கொலைககு முன்பா வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் ரேணுகா சுவாமி கொலையில் அவருக்கும் தொடர்புள்ளதா என்று விசாரித்து வந்தார்கள். வழக்கு விசாரணையில் தன் குடும்பத்தை இழுக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தர்ஷனிடம் இதற்கு முன்பாக மேனேஜர் ஆகப் பணி புரிந்த மல்லிகார்ஜூன் என்பவர் 2018ம் வருடம் முதல் காணாமல் போய்விட்டார். தர்ஷனின் சினிமா பணிகள் அனைத்தையும் அவர்தான் கவனித்து வந்தாராம். ஆனால், அவர் சினிமா வினியோகத்தில் ஈடுபட்டு நஷ்டமடைந்துள்ளார். தர்ஷன் பெயரைச் சொல்லி அவர் கடன் வாங்கியதாகவும் தெரிகிறது.
தற்போதைய மேனேஜர் ஸ்ரீதர் தற்கொலை செய்துள்ள நிலையில் காணாமல் போன முன்னாள் மேனேஜர் மல்லிகார்ஜூன் பற்றியும் தற்போது பேச ஆரம்பித்துள்ளார்கள்.
கொலை வழக்கில் சிக்கியுள்ள தர்ஷன் விவகாரம் தற்போது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.