வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் |

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'மகாராஜா'. இப்படத்திற்கு நிறைவான விமர்சனங்களும் வரவேற்பும் கிடைத்துள்ளது.
தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதாலும், போட்டிக்கு வேறு படங்கள் இல்லை என்பதாலும் இப்படத்திற்கான வசூல் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் படத் தயாரிப்பு நிறுவனமே கடந்த மூன்று நாட்களில் ரூ.32 கோடி வசூலாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதோடு, 2024ல் தமிழ் சினிமாவில் ஓபனிங் வீக்கென்டில் அதிகத் தொகை வசூலித்த படம் இது என்றும் குறிப்பிட்டுள்ளது.
தொடர் தோல்விகளைக் கொடுத்து வந்த விஜய் சேதுபதிக்கு இந்தப் படம் ஒரு திருப்புமுனையைக் கொடுத்துள்ளது.