திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
மலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலாபால் நடித்து 2018ல் வெளிவந்த படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. அந்தப் படத்தில் அரவிந்த்சாமி நடித்ததற்காக அவருக்குத் தர வேண்டிய சம்பளம், அவரிடமிருந்து கடனாகப் பெற்ற 35 லட்ச ரூபாய் ஆகியவற்றைத் தராததற்காக அப்படத்தின் தயாரிப்பாளர் கே முருகன் குமாரைக் கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
அரவிந்த்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஏப்ரல் 2017ம் ஆண்டு, ஏப்ரல் 7ம் தேதி இப்படத்தில் நடிப்பதற்காக தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு 3 கோடி ரூபாய் சம்பளம் என்றும், அந்த சம்பளத்தை படத்தின் உருவாக்கத்தின் போது தர வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. அத்துடன் வருமான வரித் துறைக்கு செலுத்த வேண்டிய டிடிஎஸ் தொகையை தயாரிப்பாளர் நேரடியாக அத்துறைக்கு செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது.
அப்படம் முடிவடைந்து 2018 மே 17ம் தேதியன்று வெளியானது. ஆனால், தயாரிப்பாளர் முழு சம்பளத்தையும் கொடுக்காமல் 30 லட்ச ரூபாய் பாக்கி வைத்தார். அது மட்டுமல்ல வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய டிடிஎஸ் தொகையான 27 லட்ச ரூபாயையும் செலுத்தவில்லை. மேலும் தயாரிப்பாளர் படத்தை வெளியிட அரவிந்த்சாமியிடம் 35 லட்ச ரூபாய் கடனும் வாங்கியிருந்தார். அதையும் திருப்பித்தரவில்லை.
இதனால், வட்டியுடன் அனைத்துத் தொகையையும் திருப்பித் தரவேண்டும் என 2018ம் ஆண்டு தயாரிப்பாளர் மீது வழக்கு தொடரப்பட்டது. 2019ல் இந்த வழக்கில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அளித்த தீர்ப்பில் தயாரிப்பாளர் முருகன் 65 லட்ச ரூபாயை 18 சதவீத வட்டியுடன் திருப்பித் தரவேண்டும், 27 லட்ச ரூபாயை வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அந்தத் தீர்ப்பை நிறைவேற்றக் கோரி அரவிந்த்சாமி தரப்பில் மீண்டும் மனு செய்யப்பட்டிருந்தது. தயாரிப்பாளர் தரப்பில் வாதிட்ட வக்கீல் தனது மனுதாரர் சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளதாகவும், அவரிடம் சொத்து எதுவுமில்லை என்று வாதிட்டுள்ளார். அவரது வாதத்தைக் கேட்ட நீதிபதி வழக்கை ஜூலை 8க்கு தள்ளி வைத்துள்ளார்.