அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
விடுதலை படத்தை அடுத்து சூரி நாயகனாக நடித்து திரைக்கு வந்துள்ள படம் கருடன். துரை செந்தில்குமார் இயக்கி உள்ள இந்த படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். இவர் இதற்கு முன்பு தனுஷ் நடித்த சீடன் படத்தில் தமிழில் அறிமுகமானார். மேலும் இந்த கருடன் படத்திற்கு பிறகு சில புதிய தமிழ் படங்களில் நடிப்பதற்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் மலையாளத்தில் மார்கோ என்ற படத்தில் தற்போது ஹீரோவாக நடித்திருக்கிறார் உன்னி முகுந்தன். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் போஸ்டரை கருடன் இயக்குனர் துரை செந்தில்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த போஸ்டரில் ரத்தம் வழியும் கத்தியை தனது வாயில் கடித்தபடி, ரத்தம் தெறிக்க வெறித்தனமாக நின்று கொண்டிருக்கிறார் உன்னி முகுந்தன்.