காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் |

மலையாளத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தலவன் என்கிற படம் வெளியானது. பிஜூமேனன் மற்றும் ஆசிப் அலி இருவரும் கதாநாயகர்களாக நடித்திருந்தனர். ஜிஸ் ஜாய் இயக்கியிருந்தார். காவல்துறையில் எதிரும் புதிருமாக இருக்கும் இரண்டு அதிகாரிகளில் ஒருவருக்கு எதிர்பாராத பிரச்சினை வரும்போது, தனது ஈகோவை மறந்து அவரை காப்பாற்ற இன்னொரு அதிகாரி எப்படி முயற்சிக்கிறார் என்பதை மையப்படுத்தி விறுவிறுப்பான புலனாய்வு திரைப்படமாக உருவாகி இருந்தது. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் நிறைவான படமாக அமைந்தது.
இந்தப்படத்தை சமீபத்தில் பார்த்த நடிகர் கமல்ஹாசன் அருமையான படம் என பாராட்டியுள்ளார். இதையடுத்து சென்னையில் நடிகர் கமல்ஹாசனை தலவன் படக்குழுவினர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின்போது நடிகர் பிஜூமேனன் இடம் பெறாவிட்டாலும் இந்த படத்தின் மூலம் மீண்டும் மறுவாழ்வு பெற்றுள்ள நாயகன் ஆசிப் அலிக்கு கமலுடனான இந்த சந்திப்பு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. இது குறித்து புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் ஆசிப் அலி.
இதற்கு முன்பாக மிகப்பெரிய வெற்றியை பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் படக்குழுவினரையும் கமல் இதேபோல் நேரில் அழைத்து பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.




