'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
எண்பதுகளில் வெள்ளிவிழா நாயகன் என்கிற அடைமொழியுடன் வெற்றிகரமான நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகர் மோகன். ஆனால் 90களில் துவக்கத்தில் இருந்து இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து கிட்டத்தட்ட சினிமாவை விட்டு ஒதுங்கினார் என்றே சொல்லலாம். சமீபத்தில் வெளியாகியுள்ள ஹரா என்கிற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்கு திரும்பியுள்ளார் மோகன். மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து கோட் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் தான் நடிக்க முடியாமல் போனது ஏன் என்பது குறித்து ஒரு புதிய தகவலை கூறியுள்ளார் மோகன். மணிரத்னம் இயக்கத்தில் மோகன், ரேவதி இணைந்து நடித்த மவுன ராகம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மோகனின் திரையுலக பயணத்திலும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த படம் வெளியாகி சில வருடங்கள் கழித்து அஞ்சலி என்கிற படத்தை இயக்கினார் மணிரத்னம். அந்த படத்திலும் மோகன், ரேவதி ஜோடியையே நடிக்க வைக்க முயற்சித்தார் மணிரத்னம்.
கதைப்படி மவுன ராகம் படத்தில் கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒன்று சேரும் அந்த ஜோடியின் மகள்தான் அஞ்சலி என அவர் கதையை உருவாக்கி இருந்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் மோகன் நடிக்க முடியாமல் போக, அவருக்கு பதிலாக நடிகர் ரகுவரன் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போது கால்ஷீட் உள்ளிட்ட சில காரணங்களால் மோகன் நடிக்கவில்லை என சொல்லப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த படத்தில் தான் ஏன் நடிக்கவில்லை என்பதற்கான நிஜமான காரணத்தை கூறியுள்ளார் மோகன்.
இயக்குனர் மணிரத்னம் கதை சொன்னபோது பாதிக்கப்பட்ட குழந்தையான அஞ்சலி, தனி அறையில் தூங்குவது போல வரும் காட்சிகளுக்கு மோகன் மறுப்பு தெரிவித்திருக்கிறார். ''ஒரு அப்பாவாக என்னால் அதை ஏற்க முடியவில்லை. அதெப்படி அஞ்சலி பாப்பாவை தனியாக ஒரு அறையில் தூங்க வைக்க முடியும் ? அப்பா, அம்மா உடனிருக்க வேண்டாமா ?' என்று மணிரத்னத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார் மோகன். இதில் இருவருக்குமே கருத்து ரீதியான உடன்பாடு ஏற்படாமல் போனதை அடுத்து, அஞ்சலி படத்தில் இருந்து விலகிவிட்டாராம்