ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் நடந்து முடிந்து ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் பித்தாபுரம் தொகுதியில் வெற்றி பெற்றார். அது மட்டுமல்லாது அவரது கட்சி போட்டியிட்ட 21 சட்டசபைத் தொகுதிகள், 2 லோக்சபா தொகுதிகள் ஆகியவற்றில் வெற்றி பெற்றது.
பவன் கல்யாணின் இரண்டாவது மனைவி ரேணு தேசாய். இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள். தனது மகன் அகிரா, மகள் ஆகியோருடன் வசித்து வருகிறார் ரேணு தேசாய். பவன் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவரது மகன் அகிரா தனது அப்பாவுடன் டில்லி வரை சென்று பிரதமர் மோடியையும் சந்தித்தார். அது குறித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளியிட்டிருந்தார் ரேணு.
இந்நிலையில் இன்று(ஜூன் 12) ஆந்திர மந்திரிசபையில் அமைச்சராக (துணை முதல்வர் வாய்ப்பு) பதவியேற்ற பவன் கல்யாணுக்கு ரேணு தேசாய் வாழ்த்து தெரிவித்துள்ளார். பதவியேற்பு விழாவுக்கு தனது மகன், மகள் ஆகியோர் அவரது அப்பா பதவியேற்பு விழாவுக்கு ரெடியாகும் போட்டோவைப் பதிவிட்டு, பவனுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.