'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படத்தில் அவருடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், பிரேம்ஜி, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மறைந்த நடிகர் விஜயகாந்த் ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் நடித்திருக்கும் நிலையில், இப்படத்தில் அப்பா மகனாக நடித்திருக்கும் இரண்டு விஜய்க்குமிடையே ஒரு அதிரடியான சண்டை காட்சி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த சண்டைக் காட்சியை ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் வித்தியாசமான முறையில் வெங்கட் பிரபு படமாக்கி இருப்பதாகவும் கோட் படக்குழுவில் தெரிவிக்கிறார்கள்.