திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
தென்னிந்தியத் திரையுலகத்தில் மிகப் பிரம்மாண்டமான திரைப்பட நகரமான ராமோஜி பிலிம் சிட்டியை அமைத்தவரும், ஈநாடு பத்திரிகை, டிவி ஆகியவற்றை நிறுவியவருமான ராமோஜி ராவ், 87, வயது மூப்பின் காரணமாக இன்று(ஜூன் 8) அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராஜமவுலி, கீரவாணி, சிரஞ்சீவி, பவன் கல்யாண் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
ரஜினி இரங்கல்
நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவில், ‛‛எனது வழிகாட்டியும், நலம் விரும்பியுமான ஸ்ரீ ராமோஜி ராவ் மறைவை கேட்டு வருத்தம் அடைந்தேன். பத்திரிக்கை, அரசியல், சினிமா போன்றவற்றில் கிங் மேக்கராக இருந்தார். அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
கமல் இரங்கல்
எக்ஸ் தளத்தில் நடிகர் கமல் வெளியிட்ட இரங்கல் பதிவில், ‛‛இந்திய ஊடகம் மற்றும் சினிமா துறையின் முன்னோடியும், ஈ நாடு குழுமத்தின் தலைவருமான ராமோஜி ராவ்-வின் மறைவு வருத்தம் அளிக்கிறது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டி அவரது நினைவாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு படப்பிடிப்பு இடம் மட்டுமல்ல, பிரபலமான சுற்றுலா தலமாகவும் உள்ளது. தொலைநோக்கு மற்றும் புதுமையான சிந்தனையாளரின் மறைவு இந்திய சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் எனது இரங்கல்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.