இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சவுபின் ஷாபிர், சிறப்புத் தோற்றத்தில் ஆமிர்கான், உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் 'கூலி'. ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் இன்று மாலை வெளியாகிறது.
கடந்த ஒரு வார காலமாகவே இந்தப் படத்தின் வியாபாரம் பற்றிய தகவல்கள் கோலிவுட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மொழியிலிருந்தும் முக்கியமான நடிகர்கள் நடிப்பதால் இப்படத்தின் வியாபார எல்லை எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக இருக்கிறதாம்.
ஒட்டு மொத்தமாக வியாபாரம் முடியும் போது தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கான வியாபாரமாக இந்த 'கூலி' படத்தின் வியாபாரம் இருக்கும் எனச் சொல்கிறார்கள். தற்போதைக்கு வெளிநாடு, தெலுங்கு உரிமை ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள் அதிகம் வந்துள்ளது. வெளிநாட்டு உரிமை 75 கோடிக்கு அதிகமாகவும், தெலுங்கு உரிமை 40 கோடிக்கு அதிகமாகவும் பேசப்பட்டுள்ளதாகத் தகவல்.
தியேட்டர் வியாபாரம் ஒரு பக்கம் இருந்தாலும் ஓடிடி, சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை என அவையே 200 கோடிக்கும் அதிகமாக விற்கப்பட்டுள்ளது என்கிறார்கள். தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் வியாபாரத்தை வளர்த்து உச்சத்துக்குக் கொண்டு செல்பவர் ரஜினிகாந்த். இந்த 'கூலி' படத்தின் மூலம் அது புதிய உச்சம் தொட்டுள்ளது என்பதே உண்மை என கோலிவுட்டில் பேச்சு நிலவுகிறது.
இவை அனைத்துமே கோலிவுட்டில் சுற்றி வரும் தகவல்கள். அதிகாரப்பூர்வத் தகவல் அல்ல என்பதைக் குறிப்பிடுகிறோம்.