பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
தனுஷ் நயாகனாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'குபேரா' படம் 100 கோடியை நான்கு நாட்களில் கடந்துள்ளதாக அவரது ரசிகர் மன்றத்தினர் சமூக வலைத்தளங்களில் போஸ்டரைப் பகிர்ந்து வருகிறார்கள். தயாரிப்பு நிறுவனம் தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் தனுஷின் 5வது 100 கோடி படமாக அமைய உள்ளது. தமிழில் அறிமுகமாகி தமிழில் சில பல வெற்றிப் படங்களில் அவர் நடித்திருந்தாலும் ஹிந்தியில்தான் முதல் 100 கோடி கிளப் படம் அமைந்தது. 2013ல் வெளிவந்த 'ராஞ்சனா' படம் தான் தனுஷின் முதல் 100 கோடி திரைப்படம்.
தமிழில் முதல் 100 கோடி படமாக 'திருச்சிற்றம்பலம்' படம் தனுஷுக்கு அமைந்தது. அதன்பின் தமிழ், தெலுங்கில் தயாராகி 2023ல் வெளிவந்த 'வாத்தி' படம் 100 கோடி வசூலைக் கடந்தது. கடந்த வருடம் தனுஷ், இயக்கம் நடிப்பில் வெளியான 'ராயன்' படம் 100 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றது.
அதற்கடுத்த வெளியீடாக கடந்த வாரம் வந்த 'குபேரா' அவரது 5வது 100 கோடி படமாக அமைந்துள்ளது. வரும் நாட்களிலும் இந்தப் படத்தின் வசூல் தெலுங்கில் நிறைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.