மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'கல்கி 2898 ஏ.டி'. பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். வைஜயந்தி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மகாபாரதத்தை தழுவி சயின்ஸ் பிக் ஷன் படமாக பிரமாண்டமாய் உருவாகி வருகிறது. ஜூன் 27ந் தேதி அன்று இத்திரைப்படம் வெளியாகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணியைத் கமல்ஹாசன் இன்று சென்னையில் துவங்கியுள்ளார். இதன் முதல் பாகத்தில் கமல் சுமார் 19 நிமிடங்கள் மட்டுமே தோன்றுகிறார். இரண்டாம் பாகத்தில் தான் அவருக்கான காட்சிகள் அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.