சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
நடிகர் சரத்குமாரின் மூத்த மகளான நடிகை வரலட்சுமிக்கு விரைவில் நிக்கோலஸ் சச்தேவ் என்பவருடன் திருமணம் நடைபெற உள்ளது. திருமணப் பத்திரிகையை அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என அப்பா சரத்குமார் மற்றும் குடும்பத்தினருடன் சென்று கொடுத்து வருகிறார்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்துள்ளார். அது குறித்த புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். வரலட்சுமியுடன் அவரது அப்பா சரத்குமார், தங்கை பூஜா, நடிகை ராதிகா சரத்குமார், அவரது மகள் ரேயான் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.
முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தும், அவரது தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து சொன்னதாகவும் குறிப்பிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஆகியோருடன் வரலட்சுமி தனி புகைப்படத்தையும், முதல்வர் உடன் சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோரும் தனித் தனியாக புகைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளனர்.