கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்த படம் 'பிடி சார்'. இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்க, காஷ்மிரா பர்தேசி, அனிகா, பாக்கியராஜ், பிரபு, தியாகராஜன், பாண்டியராஜ், திவ்யதர்ஷிணி, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். கார்த்திக் வேணுகோபாலன் திரைக்கதை எழுதி இயக்க, ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். கடந்த மே 24ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
படத்தில் பணியாற்றிவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. இதில் ஆதி பேசியதாவது: எங்கள் படத்தைச் சரியாகக் கொண்டு சேர்த்தவர்களுக்கு நன்றி. படம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. ஒரு கல்வியாளராக இருந்துக்கொண்டு இந்தப்படத்தைத் தயாரித்ததற்காக ஐசரி சாருக்கு நன்றி. பெண்கள் வேலை பார்க்கும் மில்லில் இரண்டு ஸ்பெஷல் ஷோ போட்டார்கள் என்று சொன்னபோது, படம் வசூலித்தது என்பதை விட அதிகம் சந்தோஷப்பட்டார். அது எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
கோர்ட் ரூம் சின்ன போர்ஷன் அதை நம்பி வந்து, எங்களுக்காக நடித்து தந்த பாக்யராஜ் சாருக்கு நன்றி. இளவரசு அண்ணன் ஒரு பாத்திரமாக வாழ ஆரம்பித்து விடுகிறார். ஷீட்டிங்கில் அவ்வளவு அர்ப்பணிப்புடன் நடிப்பதைப் பார்த்து அவரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன். பிரபு, பட்டிமன்றம் ராஜா, தேவதர்ஷிணி என பெரிய பெரிய ஜாம்பவான்கள் இருந்தார்கள். பெரும் ஒத்துழைப்பு தந்தார்கள். இதையெல்லாம் ஒழுங்குப்படுத்தி, நல்ல டைரக்டர், சிக்கனமான டைரக்டர் என்று பெயரெடுத்த கார்த்திக்கிற்குப் பாராட்டுக்கள்.
இந்தப்படத்தில் என்னை நாயகனாக்கியதற்கு நன்றி கார்த்திக். இந்தப்படத்தில் அனைத்து கலைஞர்களும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள் அவர்கள் அனைவருக்கும் நன்றி. முனீஷ் அண்ணாவுடன் திரும்ப நடித்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தின் வெற்றியை விட எனக்கு மனதளவில் மிகப்பெரிய திருப்தியை இந்தப்படம் தந்துள்ளது அனைவருக்கும் நன்றி. என்றார்.
இந்த படத்தில் ரேஷன் கடை ஊழியர் பற்றிய காட்சி ஒன்றில் அவர்களை அவதூறு செய்வது போன்று உள்ளது என்பதை பற்றி கேட்டபோது அதற்கு பதிலளித்த ஆதி, “அந்த காட்சியை தொடர்ந்து அதே கருத்துடன் பல காட்சிகள் இருந்தது. நேரம் கருதி அவைகள் நீக்கப்பட்டிருந்தன. அந்த ஒரு காட்சி மட்டும் படத்தில் இருந்ததால் அப்படி தோன்றி இருக்கலாம். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. அப்படி ஒரு காட்சி கூட படத்தில் இல்லை. அதையும் மீறி யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.