‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது |

குவியம் பிலிம்ஸ் சார்பில் லால்குடி எம்.ஹரிஹரன் இசை அமைத்து தயாரிக்கும் புதிய படத்தில் விதார்த், ஜனனி, எம்.எஸ்.பாஸ்கர், சரவணன், பப்லு பிரித்விராஜ், நமீதா கிருஷ்ணமூர்த்தி, ஷாரிக் ஹாசன், விகாஸ், மகா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை எழுதி கிருஷ்ணா குமார் இயக்குகிறார்.
படத்தின் பணிகள் பூஜையுடன் நேற்று தொடங்கியது. படம் பற்றி இயக்குனர் கிருஷ்ணா குமார் கூறும்போது, “நாம் செய்த தவறு எந்த காலத்திலும் நம்மை விடாது. எதாவது ஒரு வழியில் நம்மை வந்து சேரும் என்ற கதையை, ஹைபர் லிங்க் நான் லீனியர் பாணியில் திரைக்கதை அமைத்து இருக்கிறேன். இதுவரை யாரும் சொல்லாத வகையில் வித்தியாசமாக ஒன்றை முயற்சி செய்ய இருக்கிறோம். சஸ்பென்ஸ் திரில்லர், டிராமா, காதல் ஆகிய மூன்று கதைகளாக திரைக்கதை நகர்ந்து ஒரே புள்ளியில் கதை முடியும். ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கி 35 நாட்கள் தொடர்ந்து நடத்த இருக்கிறோம் என்றார்.