ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
அடுத்து வெளிவர இருக்கும் விஜய் சேதுபதியின் படம் 'மஹாராஜா'. இது அவரின் 50வது படமாகும். பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்த 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இந்த படத்தை இயக்குகிறார்.பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு 'காந்தாரா' புகழ் அஜனீஸ் லோக்நாத் இசையமைத்துள்ளார். பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், அபிராமி, நட்டி, அருள்தாஸ், முனீஷ்காந்த், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
3 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார் மம்தா மோகன்தாஸ். கடைசியாக 2021ம் ஆண்டு 'எனிமி' படத்தில் அவர் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்திருப்பது பற்றி அவர் கூறியதாவது: நான் மலையாளத்தில் பிஸியாக இருப்பதால் தமிழில் அதிக படங்கள் நடிக்க முடியவில்லை. இடையில் 'கருமேகங்கள் கலைகின்றன' படத்துக்காக அழைத்தார்கள். ஆனால், அந்தப் படப்பிடிப்பின் தேதிகள் தள்ளிப் போனபோது என்னால் தேதிகளை ஒதுக்க முடியாமல் நடிக்க இயலாமல் போனது.
'மஹாராஜா' படத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைத்ததால் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறேன். விஜய் சேதுபதியின் படங்கள் பலவற்றைப் பார்த்து அவரது நடிப்பை ரசித்திருக்கிறேன். அவருடன் நடிக்கப் போகிறோம் என்ற போது மகிழ்ச்சியுடன் நடிக்க ஒப்புக்கொண்டேன். படத்தில் ஆஷிபா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என் கதாபாத்திரத்தை சுற்றி நிறைய சஸ்பென்ஸ் இருப்பதால் இப்போதைக்கு இது பற்றி இவ்வளவுதான் சொல்ல முடியும்.
இந்தப் படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் சொன்னபோது என்னுடைய கேரக்டர் பற்றி மட்டும் தன் சொன்னார். ஆனால் நான் இப்போது முழுப் படத்தையும் பார்த்தபோது அதில் எனக்கு திருப்தி ஏற்பட்டு இருக்கிறது. படத்தின் சஸ்பென்ஸ் கடைசி வரை குறையாமல் இருக்கிறது எல்லோரும் இந்த படத்தை ரசிக்க முடியும்.
தற்போது மலையாள சினிமா தேசிய அளவில் உயர்ந்திருக்கிறது. கேன்ஸ் பட விழாவில்கூட மலையாள கலைஞர்கள் விருது பெற்றிருக்கிறார்கள். இந்த உயர்வுக்கு காரணம் மலையாள சினிமா, ஸ்கிரிப்டை நம்புகிறது. திட்டமிட்டு படப்பிடிப்பை முடித்துவிடுகிறார்கள். தமிழில் 80 நாளில் எடுக்கும் படத்தை அங்கு 30 நாளில் முடித்து விடுவார்கள். முன்னணி நடிகர், நடிகைகள் படப்பிடிப்புக்கு வந்தால் அவர்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்வார்கள். நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். நான் தமிழ் படத்தில் நடித்தபோது சில நாட்கள் இரண்டு ஷாட் மட்டும் எடுத்து விட்டு அனுப்பி விடுவார்கள்.
தற்போதைய மலையாள படங்களில் தமிழின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. தமிழ் கேரக்டர்கள் அதிகம் வைக்கப்படுகிறது. இதனால் இரு மொழிக்குமான உறவு மேம்படுகிறது. இது நல்ல மாற்றம். எனக்கு 18 வருட சினிமா அனுபவம் இருக்கிறது. 56 படங்களில் நடித்து விட்டேன். படம் இயக்கும் எண்ணம் இல்லை. அது கடினமான பணி. நடிப்பில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது, என்றார்.