கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
நடிகர், இசையமைப்பாளரான பிரேம்ஜி அமரனுக்கு வரும் ஜுன் 9ம் தேதி ஞாயிறு அன்று திருத்தணியில் திருமணம் நடைபெற உள்ளது. கடந்த பல வருடங்களாகவே அவரது திருமணம் குறித்து அவரிடம் அடிக்கடி கேட்டு வந்தனர். இந்நிலையில் 45வது வயதில் அவர் தன்னுடைய திருமணத்தை செய்து கொள்ள உள்ளார்.
இத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளார்கள். பிரைவசி கொடுத்து மணமக்களை இருந்த இடத்திலிருந்தே வாழ்த்துங்கள் என அவரது அண்ணன் இயக்குனர் வெங்கட்பிரபு நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளார். திருமண வரவேற்பு சென்னையில் பிரமாண்டமாக நடைபெறும் எனத் தெரிகிறது.
இதனிடையே, பிரேம்ஜி அமரன் அவருடைய நண்பர்களுக்கு 'பேச்சுலர் பார்ட்டி' கொடுத்துள்ளார். வெங்கட் பிரபு, பிரேம்ஜியின் ஆஸ்தான நண்பர்களான பின்னணிப் பாடகர்கள் எஸ்பிபி சரண், யுகேந்திரன், நடிகர்கள் ஜெய், வைபவ், சுனில் ரெட்டி, சுப்பு பஞ்சு, தயாரிப்பாளர் டி. சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.