ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'கல்கி 2898 ஏ.டி'. பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். வைஜயந்தி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
மகாபாரதத்தை தழுவி சயின்ஸ் பிக்ஷ்ன் படமாக பிரமாண்டமாய் பன்மொழிகளில் தயாராகி உள்ளது. ஜூன் 27ம் தேதி அன்று திரைக்கு வரும் இத்திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மற்றும் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படத்தின் டிரைலர் வரும் 10ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் எஸ்.எஸ். ராஜமவுலி, துல்கர் சல்மான் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்பட்டு வந்தது. தொடர்ந்து இத்திரைப்படத்தில் மற்றொரு கேமியோ கதாபாத்திரத்தில் நடிகை மிருணாள் தாகூர் நடித்துள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.