'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ |

இந்தியன் படத்தின் வெற்றிக்குப் பிறகு கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கு பிறகு ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'இந்தியன் 2'. எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் என இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.
இந்தியன் 2ம் பாகத்தின் இசை வெளியீட்டு விழா இருதினங்களுக்கு முன் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் இப்படம் குறித்து ஷங்கர் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியதாவது, "இந்தியன் 2ம் பாகத்தில் காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் இடம் பெறவில்லை. ஆனால், இந்தியன் 3ம் பாகத்தில் காஜல் சம்மந்தப்பட்ட காட்சிகள் இடம் பெறும்" என்றார்.
இதன்படி பார்த்தால் இந்தியன் தாத்தா பிளாஷ்பேக் காட்சிகள் இந்தியன் 3ம் பாகத்தில் தான் இடம் பெறும் என தெரிகிறது.




