தொடரும் படம் பார்க்க வந்த ரசிகர்களிடம் வீடியோ காலில் உரையாடிய மோகன்லால் | ஐஸ்வர்யா ராய் என்னை சிறுவனாக நினைத்ததில்லை : ரன்பீர் கபூர் | ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் படத்தில் நட்புக்காக நடனமாடும் ஸ்ருதிஹாசன் | சேப்பாக்கத்தில் சென்னை மேட்ச் பார்த்து ரசித்த அஜித், சிவகார்த்திகேயன் | தமிழ் சினிமாவில் சிக்ஸ்பேக் சண்டை | பிளாஷ்பேக்: இளையராஜா முடிவு செய்த கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக் : தமிழில் வெளியான முதல் கன்னடப் படம் | சசிகுமார் ஜோடியாக நடித்தது ஏன்? : சிம்ரன் விளக்கம் | காஷ்மீரில் அமைதியை கெடுப்பவர்களுக்கு கடும் தண்டனை : ரஜினி வேண்டுகோள் | 'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயினாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம்? |
ஒரு நடன கலைஞராக இருந்து பின் நடன இயக்குனராக மாறி அதன் பின் நடிகராக தன்னை உயர்த்தி கொண்டவர் நடிகர் ராகவா லாரன்ஸ். தற்போது தமிழில் முன்னணி நட்சத்திரமாக பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரைப் போலவே நடன திறமை கொண்ட இவரது தம்பி எல்வினும் நடிப்பில் ஆர்வம் கொண்டு அண்ணன் வழியை பின்பற்றி 'புல்லட்' என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை இன்னாசி பாண்டியன் என்பவர் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் ராகவா லாரன்ஸும் நடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தை ராகவா லாரன்ஸ் பார்த்தார். படம் சிறப்பாக வந்திருப்பதை கண்டு மகிழ்ச்சியடைந்த லாரன்ஸ் தனது தம்பியின் நடிப்பை பாராட்டி அவருக்கு ஒரு விலை உயர்ந்த கார் ஒன்றையும் பரிசளித்துள்ளார். இந்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள லாரன்ஸ், “உங்கள் அனைவரிடமும் இந்த சிறப்பு தருணத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.