குட் பேட் அட்லி டீசர் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட ஆதிக் | லோகேஷ் பிறந்தநாளில் வெளியிட்ட கூலி புகைப்படங்கள் | நான் சினிமாவில் நீடிக்க பாக்யராஜ்தான் காரணம் : சாந்தினி | போலீஸ் அதிகாரியாக நடிக்கும் தர்ஷன் | உபாசனா நடிக்கும் 'எனை சுடும் பனி' | பிளாஷ்பேக் : பிரபு, கார்த்திக் நடிக்க மறுத்த படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : உலக போர், சென்னை மாகாணத்தை கிண்டல் செய்த படம் | ஒரு இடைவெளிக்குத் தயாராகும் தமிழ் சினிமா | 'டிராகன்' படத்தில் ஐந்து இயக்குனர்கள் | அதிக பணம் கொடுத்து தடுமாறும் ஓடிடி நிறுவனங்கள் |
கடந்த 2006ம் ஆண்டில் ஒபிலி என். கிருஷ்ணன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா சாவ்லா ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் 'சில்லுனு ஒரு காதல்'. இப்படம் இன்னும் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளிவந்த அத்தனை பாடல்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒபிலி என்.கிருஷ்ணா புதிய படம் ஒன்று இயக்கவுள்ளதாக அறிவித்தனர். தற்போது கிடைத்த புதிய தகவல் படி, பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் சில்லுனு ஒரு காதல் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது என்கிறார்கள். இதில் கதாநாயகனாக கவின் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.