அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்து வரும் நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பது யார் என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்த படத்தில் நடிக்க நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. அதையடுத்து தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இப்போது இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார் என்று ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி வரை கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருந்தால் அஜித்துக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் முதல் படம் இதுவாக இருக்கும்.