டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி | லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? |

தமிழ் சினிமா உலகின் முக்கிய தம்பதிகள் நயன்தாரா, விக்னேஷ் சிவன். சமூக வலைத்தளங்களில் அவர்களைப் பற்றி அடிக்கடி ஏதாவது அப்டேட்டைக் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அந்த புகைப்படங்களும் டிவியில் செய்தியாகக் கூட இடம் பெறுவதுண்டு.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி தற்போது தங்களது இரட்டைக் குழந்தைகளுடன் ஹாங்காங் சுற்றுலாவுக்குச் சென்றுள்ளனர். அங்குள்ள டிஸ்னிலேன்ட் உள்ளிட்ட சில இடங்களில் தங்களது குழந்தைகளுடன் எடுத்த புகைப்படங்களை நயன், விக்கி இருவருமே பகிர்ந்துள்ளனர்.
“12 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு வந்துள்ளேன். கையில் 1000 ரூபாய், காலில் செருப்புடன் 'போடா போடி' படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி வாங்க இங்கு வந்தேன். என்னுடைய அன்பான குழந்தைகளுடன் இங்கு வந்திருப்பது இனிமையாகவும், எமோஷனலாகவும், திருப்தியாகவும் உள்ளது,” என விக்னேஷ் சிவன் இது பற்றி குறிப்பிட்டுள்ளார்.