அபிராமிக்கு சிபாரிசு கடிதம் தர மறுத்த கமல் | ‛அலைபாயுதே' படத்தின் ரகசியத்தை முதல்முறையாக பகிர்ந்த மணிரத்னம்! | பள்ளி பருவத்தை நினைவுகூர்ந்த சாய் பல்லவி! | இயக்குனர் அவதாரம் எடுக்கும் லப்பர் பந்து நாயகி! | சாதி தொடர்பான படங்களை எடுப்பதில் உடன்பாடில்லை: கவுதம் மேனன் கருத்து | சிம்பு பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! | ராம் கோபால் வர்மா கம்பேக் தருவாரா? | ‛ஜனநாயகன்' படத்தின் செகண்ட்லுக் போஸ்டர்: குஷியான ரசிகர்கள் | சவால் விடும் தாரா நடிகை | பத்மபூஷன் - சீனியர் நடிகர்களுடன் இணைந்த அஜித் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கவர்ச்சி நடிகையின் முகத்தை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தோடு இணைத்து டீப் பேக் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை தொடர்ந்து ஆலியா பட், கஜோல், கத்ரீனா கைப் உள்ளிட்டோரில் டீப் பேக் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து புகார்கள் குவிந்த நிலையில் மத்திய சைபர் கிரைம் இது குறித்த நடவடிக்கையில் இறங்கியது. என்றாலும் டீப் பேக் வீடியோக்கள் வெளியாவதை தடுத்து நிறுத்த முடியவில்லை.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ராஷ்மிகாவின் டீ பேக் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், சிவப்பு நிற பிகினி உடை அணிந்து அவர் ஒரு அருவியின் கீழ் நிற்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. ஆனால் அது அவருடையது அல்ல. கொலம்பியா மாடல் அழகி டேனியேலா என்பவரின் முகத்தை நீக்கிவிட்டு ராஷ்மிகாவின் முகத்தை தொழில்நுட்பத்தின் மூலம் இணைத்து வெளியிட்டு இருப்பது தெரியவந்துள்ளது.