கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை | டாக்டர் ஆக ஆசைப்பட்ட ஹீரோயின் | அமானுஷ்ய படத்தில் நட்டி : வரலாற்று பின்னணியில் உருவாகும் ‛நீலி' | ஜூலை 4ல் 7 படம் ரிலீஸ்... எந்த படம் ஓடுது |
நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த சில வருடங்களாக முதன்மை கதாபாத்திரத்தில் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது புதுமுக இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'ரகு தாத்தா'. இந்த படத்தை 'கேஜிஎப்', 'காந்தாரா' போன்ற படங்களை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர். இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த சில மாதங்களாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தது. இப்போது ஆகஸ்ட் 15ல் ரிலீஸ் என படக்குழு அறிவித்துள்ளனர்.
கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பதிவில், ‛‛ரகு தாத்தா! சாகசம் நிறைந்த கயல்விழியின் கதை, உங்கள் மனங்களை கவர வருகிறது! உங்களை சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும், நெகிழ வைக்கும் ரோலர் கோஸ்டர் ரைடுக்கு தயாராகுங்கள். ரகு தாத்தா ஆகஸ்ட் 15, 2024 அன்று வெளியாகிறது'' என குறிப்பிட்டுள்ளார்.