ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படமாக ‛ராயன்'-ல் நடித்து முடித்துள்ளார். அடுத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வருவதோடு, சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படங்களை எல்லாம் முடித்த பிறகு மூன்றாவது முறையாக ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் 'தெரே இஸ்க் மெயின்' என்கிற ஹிந்தி படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கின்றார்.
இதன் பின்னர் இப்படம் குறித்து எந்தவித புதிய அறிவிப்புகளும் வெளியாகவில்லை. தற்போது கிடைத்த புதிய தகவலின் படி, இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் துவங்கும் என்கிறார்கள். வாரணாசி மற்றும் உத்திரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டு மாதங்கள் படப்பிடிப்பு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. 2025ம் ஆண்டு இப்படம் திரைக்கு வரும் என்கிறார்கள்.