'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் நடிகை உன்னி முகுந்தன் தயாரித்து நடித்த மாளிகைப்புரம் என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த 'தேவ நந்தா' என்கிற சிறுமி தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டை பெற்று பிரபலமானார். சமீபத்தில் வெளியான அரண்மனை-4 படத்திலும் தமன்னாவின் மகளாக நடித்திருந்தவர் இவர்தான். இதைத்தொடர்ந்து தற்போது ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் தான் நடித்துள்ள 'கு' என்கிற ஒரு படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தனது வீட்டில் இருந்தபடி தனது யூடியூப் சேனலுக்காக ஒரு பேட்டி கொடுத்திருந்தார் தேவ நந்தா. ஆனால் சோசியல் மீடியாவில் உள்ள ஒரு சிலர் அந்த பேட்டியில் இருந்து ஒரு சில பகுதிகளை மட்டும் பதிவிறக்கம் செய்து தேவ நந்தாவை கிண்டலடிக்கும் விதமாக வேறு சில விஷயங்களை அந்த வீடியோவுடன் இணைத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர்.
இவர்களது செயல் தனது மகளின் மனதை நோகடிக்கும் விதமாக இருப்பதாகவும் தங்களது அனுமதியின்றி தனது மகளின் வீடியோவை இவ்வாறு தவறாக பயன்படுத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எர்ணாகுளம் சைபர் கிரைம் போலீசாரில் தேவ நந்தாவின் தந்தை தனது மகள் மூலமாக புகார் அளித்துள்ளார்.