சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் கோட். இந்த படத்தில் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில், சமீபத்தில் புதுச்சேரியில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இங்கே பழைய கோட்டை சாலையிலும் கடற்கரை சாலையிலும் இந்த படத்தில் முக்கியமான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இரவு நேரத்தில் படமாக்கப்பட்ட இந்த சண்டைக் காட்சிகளில் கார்கள் பறந்து வெடித்து சிதறுவது போல காட்சிகள் எடுக்கப்பட்டன. இரவு நேரம் என்பதால் படப்பிடிப்பு நடப்பது பற்றி அறியாமல் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் இந்த சத்தம் கேட்டு பதறியடித்து வெளியே வந்து பார்த்தனர்.
கோட் படத்தின் படப்பிடிப்பு நடப்பதை அப்போதுதான் தெரிந்துகொண்ட அவர்கள் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்துமாறு தங்களது எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் படக்குழுவினர் அவர்களிடம் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தான் இந்த படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றும் இதனால் எந்த விதமான அபாயமும் யாருக்கும் ஏற்படாது என்றும் உறுதி அளித்து அவர்களை சமாதானப்படுத்தி, பின்னர் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தினார்களாம்.