2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

நடிகை அமலாபால் நடிப்பில் சமீபத்தில் மளையாளத்தில் ஆடுஜீவிதம் படம் வெளியானது. தற்போது குழந்தை பிறப்பை எதிர்நோக்கி கர்ப்பிணியாக காத்திருக்கும் அமலாபால் அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட தவறாமல் கலந்து கொண்டார். இந்த நிலையில் அடுத்ததாக அவரது நடிப்பில் உருவாகியுள்ள லெவல் கிராஸ் என்கிற படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ஆசிப் அலி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் அர்பாஷ் அயூப் என்பவர் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் முதன்மை துணை இயக்குனராக பணியாற்றியவர். அது மட்டுமல்ல இந்த படத்தையும் ஜீத்து ஜோசப் தான் வெளியிடுகிறார்.
விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த நிலையில் அமலாபால் இந்த படத்திற்காக முதன்முதலாக தனது சொந்தக் குரலில் 'பின்னில் தெரியும் ரூபம்' என்கிற ஒரு பாடலை பாடியுள்ளார். அமலா பாலின் குரல் கேட்பதற்கு வித்தியாசமாக அதேசமயம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.