'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் முடிந்த சில நாட்களிலேயே அபுதாபி சென்றார். அங்கு ஐயக்கிய அமீரக அரசு அவருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்தது. தொடர்ந்து பிரதமர் மோடி திறந்து வைத்த சுவாமி நாராயண் கோயிலுக்கு சென்று வழிபட்டார். இரண்டு வார ஓய்விற்குப் பிறகு நேற்று சென்னை திரும்பினார்.
அடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கூலி' படத்தில் நடிக்க போகிறார். இதன் படப்பிடிப்பு அடுத்தமாதம் துவங்க உள்ளது. அதற்குள் இமயமலை சென்று திரும்ப எண்ணிய ரஜினி இன்று(மே 29) இமயமலை புறப்பட்டுச் சென்றார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‛‛இந்தியா மட்டுமல்ல, உகத்திற்கே ஆன்மிகம் தேவை. ஆன்மிகம் என்றால் சாந்தியும் சமாதானமும்'' என்றார். தொடர்ந்து அவரிடம் ‛இசையா, கவிதையா' என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ‛நோ கமென்ட்ஸ்' என்றார். மேலும் அவரிடத்தில் ‛பிரதமர் மோடி மீண்டும் வெல்வாரா' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டதற்கு, ‛‛மன்னிக்கவும், அரசியல் பற்றி எதுவும் கேட்காதீங்க'' என தெரிவித்தார்.