லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
2024ம் ஆண்டின் கோடை விடுமுறை இன்னும் ஒரு வாரத்துடன் முடிய உள்ளது. அடுத்த வாரம் ஜுன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த வார இறுதி விடுமுறை நாட்களில் மக்களும் பிஸியாகவே இருப்பார்கள். தங்கள் குழந்தைகளுக்குத் தேவையானவற்றை வாங்க கடைகளுக்குச் செல்லத் திட்டமிட்டிருப்பார்கள். அதனால், தியேட்டர்கள் பக்கம் வரும் கூட்டம் குறையவும் வாய்ப்புண்டு.
இருந்தாலும் கிடைக்கும் இந்த இடைவெளியிலும் படத்தை வெளியிட சிலர் திட்டமிட்டுள்ளார்கள். இந்த வாரம் மே 31ம் தேதி சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள 'கருடன்', இயக்குனர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுக உள்ள 'ஹிட் லிஸ்ட்', மற்றும் குழந்தைகள் படமான 'புஜ்ஜி at அனுப்பட்டி' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
'விடுதலை' படத்திற்குப் பிறகு சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள 'கருடன்' படமும் வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். சில சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்காவுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கப் போகிறது என திரையுலகினர் ஆர்வமாக இருக்கிறார்கள்.