‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

கடந்த 2015ம் ஆண்டில் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்து வெளிவந்த படம் 'தனி ஒருவன்'. இதன் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதிலும் ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து நடிக்கின்றனர். வில்லனாக ஹிந்தி நடிகர் அபிஷேக் பச்சன் நடிக்க உள்ளார். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என கூறப்பட்டது. தற்போது படத்தின் பட்ஜெட் அதிகரிப்பு தொடர்பான பிரச்னையால் இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளி போவதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.