மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
பாலிவுட் நடிகை லைலா கான். 'வாபா: தி டெட்லி லவ் ஸ்டோரி' உள்ளிட்ட சில படங்களில் நடித்து இருந்தார். 'மேக்-அப்' என்கிற கன்னட படத்திலும் நடித்தார். ஒரு சில படங்களில் நடித்து வேகமாக வளர்ந்து வந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் இவர், தாய் செலினா, சகோதரிகள் ஆஸ்மினா, சாரா, சகோதரன் இம்ரான் மற்றும் ஒன்றுவிட்ட சகோதரி ரேஷ்மா ஆகியோர் மாயமானதாக புகார் வந்தது. போலீசார் தேடி வந்தனர்.
இந்த சூழலில், அதே ஆண்டு ஜூலையில் இகத்புரியில் லைலாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டுத் தோட்டத்தில் அழுகிய நிலையில் அவரின் உடல் மீட்கப்பட்டது. அவரது தாய் செலினா மற்றும் உடன்பிறந்தவர்கள் என மேலும் ஐந்து பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இதையடுத்து நடத்திய விசாரணையில், செலினாவின் மூன்றாவது கணவரும், லைலாவின் வளர்ப்பு தந்தையுமான பர்வேஸ் தக்,இந்த கொலைகளை செய்தது அம்பலமானது.
சொத்து தகராறில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் முடிவில் செலினா, லைலா என இருவரையும் கொலை செய்த பர்வேஸ் தக், பின்னர் மேலும் நான்கு பேரை கொலை செய்ததும் தெரிய வந்தது. ஜம்மு - காஷ்மீரில் பதுங்கியிருந்த அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, இது தொடர்பான விசாரணை கடந்த 13 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக 40 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் அடிப்படையில், பர்வேஸ் தக் மீது கொலை மற்றும் ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட குற்றங்கள் உறுதி செய்யப்பட்டன.
இதையடுத்து, அவர் குற்றவாளி என கடந்த 9ம் தேதி நீதிமன்றம் அறிவித்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, பர்வேசுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.