'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நொய்டா அருகே சர்வதேச தரத்தில் 1000 ஏக்கரில் பிலிம் சிட்டி அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதற்கான பணிகள் ஏற்கெனவே ஆரம்பமாகின. அந்த நகரை நிர்மாணிப்பதற்கான கடைசி கட்ட போட்டியில் நால்வர் இருந்தனர்..
பிரபல ஆடியோ கம்பெனி நிறுவனமான டி சீரிஸ், அக்ஷய்குமார் பங்குதாரராக இருக்கும் சூப்பர்சானிக் டெக்னோபில்ட் என்ற நிறுவனம், போனி கபூர் பங்குதாரராக இருக்கும் பேவியூ புராஜக்ட்ஸ், பிரபல தயாரிப்பாளர் கேசி பொக்காடிய பங்குதாரராக இருக்கும் 4 லயன்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் ஆகியவை அந்த போட்டியில் இருந்தன. அந்நிறுவனங்கள் அவர்களது திட்டங்களைப் பற்றி உ.பி அரசு அதிகாரிகளிடம் விளக்கியுள்ளது. டெண்டரில் போனி கபூர் சார்ந்த நிறுவனம் வெற்றி பெற்றது.
இந்த பிலிம் சிட்டி யமுனா எக்ஸ்பிரஸ் ஹைவே செக்டர் 21 மற்றும் நொய்டா சர்வதேச விமான நிலையம் அருகே அமைய உள்ளது. திரைப்படப் பல்கலைக் கழகம், சினிமா மியூசியம், ஹெலிபேட் உள்ளிட்ட பல வசதிகள் அங்கு வர உள்ளது. பிபிபி மாடலில் உருவாக உள்ள இந்தத் திரைப்பட நகரத்தை அமைக்க போனி கபூர் பங்குதாரராக இருக்கும் பே வியு புராஜக்ட் நிறுவனம் அதிக வருவாய் பங்குத் தொகையைக் காட்டியதால் டெண்டரைக் கைப்பற்றியுள்ளது.