கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? | வா வாத்தியாருக்கு யு/ஏ சான்றிதழ்: ஆனாலும் பதைபதைப்பில் படக்குழு | இன்று ‛சேது' படத்துக்கு வயது 26 |

சின்னத்திரை பிரபலமான ரேகா நாயர், தற்போது படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் சோஷியல் மீடியாக்களில் சமூகத்தில் நடக்கும் அவலங்கள் குறித்தும் தைரியமாக கருத்துகள் கூறி அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். அவரை பற்றி நெட்டீசன்கள் பலர் ஏராளமான வதந்திகளை பரப்பி வருகின்றனர். இந்நிலையில், ரேகா நாயர் ஏற்கனவே திருமணமான எம்.எல்.ஏவை தற்போது இரண்டாம் திருமணம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரேகா நாயர், 'எம்.எல்.ஏ வின் அப்பாவை எனக்கு தெரியும். நாங்கள் ஒன்றாக மாரத்தான் ஓடுவோம். ஒரே ஏரியாவில் இருப்பதால் அவர் குடும்பத்தில் அனைவருமே எனக்கு நண்பர்கள். வதந்திகளில் வெளியாவது போல் எம்.எல்.ஏவுக்கும் எனக்கு திருமணமாகிவிட்டதா என்றால் அதை போய் அவரிடமே கேளுங்கள்' என்று பதிலடி கொடுத்துள்ளார்.