''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
சிதம்பரம் இயக்கத்தில் சவுபின் ஷாபிர், ஸ்ரீநாத் பாசி மற்றும் பலர் நடிப்பில் பிப்ரவரி மாதம் வெளிவந்த படம் 'மஞ்சம்மேல் பாய்ஸ்'. இப்படம் சுமார் 250 கோடியை வசூலித்து சாதனை புரிந்தது.
கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த 'குணா' படத்தில் வந்த குகையை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது. படத்தில் இடம் பெற்றிருந்த 'குணா' படப் பாடலான 'கண்மணி அன்போடு….' பாடல் படத்துடன் ஒன்றி, உருக வைத்து படத்தைப் பார்க்க பெரும் காரணமாக அமைந்தது.
இளையராஜா இசையில் வெளிவந்த அப்பாடல்தான் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்தின் வெற்றிக்கும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்ல வேண்டும். ஆனால், அப்பாடலைப் பயன்படுத்த இளையராஜாவிடம் அனுமதி பெறவில்லை என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
எந்த ஒரு பாடலைப் பயன்படுத்த வேண்டுமென்றாலும் சம்பந்தப்பட்டவர்களிடம் முறையான அனுமதி பெற்றே பயன்படுத்த வேண்டும். ஆனால், 'மஞ்சும்மேல் பாய்ஸ்' குழு அனுமதி பெறாததால் இளையராஜா தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
'மஞ்சம்மேல் பாய்ஸ்' படக்குழுவினர் 'குணா' நடிகர் கமல்ஹாசனை மட்டும் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதே சமயம் அவர்கள் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்திக்கவேயில்லை. அதன் காரணம் இப்போதுதான் தெரிய வந்துள்ளது. பாடலுக்கு முறையான அனுமதி வாங்கியிருந்தால் அவர்கள் இளையராஜாவை சந்திப்பத்தில் எந்த சிக்கலும் இருந்திருக்காதே ?. அதனால்தான் அவரை சந்திப்பதைத் தவிர்த்தார்களா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.