ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
சென்னையில் ஆண்டு தோறும் ரஷ்ய திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது (மே.24,25). கடந்த திரைப்பட விழாக்களை விட இந்த விழா அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கப்போகிறது. காரணம் விழாவில் திரையிடப்படும் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு திரையிடப்படுகிறது.
ரஷ்யன் கலாசார மையத்தில் நடக்கும் இந்த விழாவின் முதல் நாளான நாளை மாலை 6 மணிக்கு 'புராஜெக்ட் ஜெமினி' என்ற படம் திரையிடப்படுகிறது. இது ஒரு அறிவியல் புனைவுத் திரைப்படம். கடந்த 2022ல் வெளியான இந்த படம் விண்வெளிக்கு செல்லும் மனிதர்களை பற்றியது. நாளை மறுநாள்(25ம் தேதி) மாலை 6 மணிக்குத் திரையிடப்படும் 'ஏர்' என்ற படம் இந்த ஆண்டு வெளியான புதிய படமாகும். போர்முனையில் ஒவ்வொரு நொடியும் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் இளம் பெண்களின் வாழ்க்கையை பற்றிய படம். தொடர்ந்து 7.30 மணிக்குத் திரையிடவிருக்கும் 3வது படம், 2021ல் வெளியான 'ஆபான் தி மேஜிக் ரோட்ஸ்' என்ற படம் குழந்தைகளுக்கான ஒரு சாகசத் திரைப்படம்.