'பைசன்' படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு | ஆதங்கத்துடன் புலம்பும் முகமூடி நடிகை | நடிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நடிகை | மலையூரு நாட்டாமை மனச காட்டு பூட்டாம..: ‛டூரிஸ்ட் பேமிலி' கமலேஷ் | அனுபமாவின் அனுபவம் | 59 நாட்களில் தமிழ் கற்றேன்: ‛செம்பருத்தி பூ' ஸ்வாதி | நான் ஏன் பிறந்தேன், முத்து, மார்கன் - ஞாயிறு திரைப்படங்கள் | மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நட்சத்திர நிகழ்ச்சியான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் சாயலில் இன்னொரு சேனல் 'டாப் குக்கு டூப் குக்கு' என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருக்கிறது. 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் நான்கு சீசன்களில் நடுவராக வந்த வெங்கடேஷ் பட், அந்நிகழ்ச்சியில் இருந்து விலகி இந்த நிகழ்ச்சிக்கு நடுவராகி இருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்கு சீசன்களை தயாரித்த மீடியா மேசன்ஸ் நிறுவனம்தான் இந்த நிகழ்ச்சியையும் தயாரிக்கிறது.
இந்நிகழ்ச்சியில் உள்ள 9 போட்டியாளர்கள் மூன்று அணிகளாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு ஒரு செப்பும் தலைவராக ஒதுக்கப்படுவர். இந்த நிகழ்ச்சியில் வெற்றிபெறும் போட்டியாளருக்கு 20 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில் குக்குகளாக பெப்சி விஜயன், சோனியா அகர்வால், சைத்ரா ரெட்டி, சிங்கம் புலி, ஐஸ்வர்யா தத்தா, நரேந்திர பிரசாத், சாய் தீனா, ஷாலி நிவாஸ், சுஜாதா சிவகுமார் ஆகியோர் பங்கேற்கிறார்கள். டூப் குக்குகளாக ஜிபி முத்து, தீபா, தீனா, மோனிஷா, அதிர்ச்சி அருண், பரத், கதிர், சவுந்தர்யா, முகுந்த், விஜய் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியின் தொடக்க எபிசோட்களில் வடிவேலு கலந்து கொள்கிறார். இதற்கான புரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வடிவேலு இதற்கு முன்பும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்வையாளராக கலந்து கொண்டிருக்கிறார். நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்து பேசி இருக்கிறார். நேரடியாக கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இது என்கிறார்கள்.