'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பிரபாஸ் நடித்து வரும் பிரமாண்ட பான் இந்தியா படம் 'கல்கி 2898'. இதில் அவருடன் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். நாக் அஸ்வின் இயக்குகிறார். வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. வருகிற ஜூன் 27ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் படத்தின் முக்கியமான கேரக்டர்கள் போஸ்டர் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. கடைசியாக அமிதாப்பச்சன் 'அஸ்வத்தமா' என்ற கேரக்டரில் நடிப்பதாக அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது படத்தில் பிரபாஸின் நண்பனாக 'புஜ்ஜி' என்ற ரோபோ நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புஜ்ஜியின் முழுமையான அறிமுகம் வருகிற 22ம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் புஜ்ஜியை உருவாக்கிய தொழிலநுட்ப கலைஞர்கள் பேசி உள்ளனர்.