புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் | மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? | அகண்டா 2 தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு… | ஒரு சாராருக்கு பிடித்த படங்களே வருகின்றன : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் |

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக விஷ்ணு மஞ்சு தயாரித்து, நடிக்கும் படம் 'கண்ணப்பா'. இது 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது. பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக இதனை தயாரிக்கிறார் விஷ்ணு மஞ்சு. மோகன் பாபு, பிரபாஸ், அக்ஷய் குமார், மோகன்லால், சரத்குமார் உள்ளிட்ட பல மொழி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். முகேஷ் குமார் சிங் இயக்குகிறார்.
தற்போது இந்த படத்தில் காஜல் அகர்வால் இணைந்திருக்கிறார். இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'மொசகல்லு' என்ற படத்தில் காஜல் அகர்வாலும், விஷ்ணு மஞ்சுவும் அண்ணன், தங்கையாக நடித்திருந்தார்கள். இப்போது இந்த படத்தின் மூலம் மீண்டும் இணைகிறார்கள். காஜல் அகர்வால் நடிக்கும் கேரக்டர் பற்றி அறிவிக்கப்படவில்லை.




