சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்களில் ஒரு சிலர்தான் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்கள். விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன், காமெடி ஷோவில் நடித்த சந்தானம் ஆகியோரைத் தொடர்ந்து அந்த டிவியில் இருந்து வந்த மற்றொருவர் கவின். இவர் டிவி சீரியலில் இருந்து வந்தவர்.
முதன் முதலில் 'சத்ரியன்' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். அப்படம் வெற்றி பெறாததால் கவினும் கண்டு கொள்ளப்படவில்லை. அடுத்து 'நட்புனா என்னனு தெரியுமா' படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படமும் ஓடவில்லை. ஓடிடி தளத்தில் வெளியான 'லிப்ட்' படம் வரவேற்பைப் பெற்றது. கடந்த வருடம் வெளிவந்த 'டாடா' படமும் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்றது.
கடந்த வாரம் வெளியான 'ஸ்டார்' படம் சுமார் 20 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இதற்கடுத்து நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் 'பிளடி பெக்கர்' படத்தில் நடிக்க உள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறார். அடுத்தடுத்து தயாராக உள்ள இந்தப் படங்களால் வளரும் நடிகர் பட்டியலில் இணைந்துள்ளார் கவின்.