நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களான செப் வெங்கடேஷ் பட்டும், தாமுவும் சீசன் 5ல் கலந்து கொள்ள போவதில்லை என்று அறிவித்தனர். வெங்கடேஷ் மற்றொரு சேனலில் ‛டாப் குக்கு டூப்பு குக்கு' என்ற நிகழ்ச்சியில் இணைந்துவிட்டார். ஆனால் தாமு, குக் வித் கோமாளி சீசன் 5-ல் தொடர்ந்து வருகிறார். இதனையடுத்து தாமு ஏன் வெங்கடேஷ் பட்டுடன் செல்லவில்லை என்ற கேள்வியை பலரும் எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், அதற்கு பதிலளித்த வெங்கடேஷ் பட், ‛மீடியா மேஷன்ஸ் நிறுவனம் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தயாரித்தது. மீடியா மேஷன்ஸ் நிறுவனம் விஜய் டிவியை விட்டு விலகியதால் முதலில் நானும் தாமுவும் மீடியா மேஷன்ஸ் நிறுவனத்துடன் செல்வதாக முடிவு எடுத்தோம். இதற்கிடையில் சேனல் தரப்பிலிருந்து எங்கள் இருவரிடமும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தாமுவுக்கு உடன்பாடு ஏற்பட்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொடர்கிறார். அவர் விலகுவதாக பதிவிட்டிருந்த வீடியோவையும் நீக்கிவிட்டார்' என்று கூறியுள்ளார்.