மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவரது 14வது படம் குறித்த அறிவிப்பு மற்றும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் 19ம் நூற்றாண்டில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகிறது. இப்படத்திற்கு தற்காலிகமாக விடி 14 என்று டைட்டில் வைத்துள்ளார்கள்.
ஒரு போர் வீரனின் பின்னணியில் நடக்கும் கதை என்பதை உணர்த்தும் வகையிலான ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். அதில், 1854 முதல் 78 காலகட்டத்தில் வாழ்ந்த நாயகனின் கதை இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய் தேவரகொண்டா நடித்த டாக்ஸிவாலா என்ற படத்தை இயக்கிய ராகுல் சங்கிரித்யன் என்பவர் தான் இப்படத்தையும் இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.