குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
அஜித்தின் ‛ரெட்', சூர்யாவின் ‛மாயாவி' போன்ற படங்களை இயக்கியவர் சிங்கம் புலி. ஒருக்கட்டத்திற்கு மேல் காமெடி நடிகராக மாறி தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரின் சிகிச்சைக்கு நிதி தேவைப்படுவதாகவும் கூறி பேஸ்புக்கில் அவர் பெயரில் போலி கணக்கு உருவாக்கி நிதி திரட்டி வந்துள்ளனர். இதுபற்றிய தகவல் சிங்கம் புலியின் கவனத்திற்கு வர உடனடியாக அதை மறுத்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், ‛‛கடந்த இரு தினங்களாக பேஸ்புக்கில் எனது பெயரில் போலியான அறிவிப்பு வெளியிட்டு எனக்கு உடல்நலம் குறைவு என பணம் பறிக்கின்றனர். நான் நலமாக உள்ளேன். நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை, பணம் பெறும் சூழ்நிலையிலும் நான் இல்லை. யாரும் இதை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். பொய்யான பேஸ்புக் முகவரியை பயன்படுத்தி சிலர் ஏமாற்றி பிழைக்கிறார்கள். அதற்கு யாரும் இடம் கொடுக்க வேண்டாம். கவனமாக இருங்கள்'' என தெரிவித்துள்ளார்.