ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது |
பாண்டவர் இல்லம் தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஆர்த்தி சுபாஷ். அந்த தொடரின் மூலம் ஆர்த்தி சுபாஷுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பின் சில நாட்கள் கேப் விட்டிருந்த அவர் தற்போது மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள வீட்டுக்கு வீடு வாசப்படி என்கிற தொடரில் வில்லியாக என்ட்ரி கொடுத்துள்ளார். ரசிகர்களும் ஆர்த்தி சுபாஷை மீண்டும் சின்னத்திரையில் காண அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஆர்த்தி சுபாஷ் அண்மையில் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு மாடல் உடையில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.